ஒரு காலத்தில் உச்ச நடிகராக வலம் வந்த அஜித் குமார், தற்போது படங்கள் எதுவும் கிடைக்காமல் கலக்கத்தில் உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகிறது. 185 கோடி சம்பளம் கேட்க்கும் அஜித்தை வைத்து, எந்த ஒரு தயாரிப்பு நிறுவனமும் படம் தயாரிக்க தயாராக இல்லை. காரணம் அவரது படங்கள் குறைந்த பட்சம் 200 கோடியை தான் வசூலித்துள்ளதாம். எனவே சம்பளமாக 185 கோடியை கொடுத்தால் எப்படி படம் எடுப்பது ?
தொடர்ச்சியாக அஜித் நடித்த பல படங்கள் தோல்வியடைந்த நிலையில். லைக்கா நிறுவனம் தயாரித்து வெளியிட்ட "விடா முயற்ச்சிக்கு" பின்னர் அவருக்கு எந்த ஒரு படமும் சரியாக வாய்க்கவில்லை. AGS நிறுவனத்தை அணுகிய அஜித் குமார், ஒரு படம் பண்ணலாமே என்று கேட்க்க, அவர்கள் 85 கோடி சம்பளம் மட்டுமே தர முடியும் என்று முதலில் பேசிவிட்டு. பின்னர் அப்படி சம்பளம் கொடுத்து படத்தை எடுப்பது ரெம்பவே ரிஸ்கான வேலை என்று கை கழுவி விட்டார்களாம்.
மேலும் red giant movies, sun pictures என்று பல நிறுவனங்களை அஜித் அணுகியும், எவரும் அஜித்தை வைத்து படம் எடுக்க தயாராக இல்லை என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இதனை வலைப் பேச்சு பிஸ்மியும்(valai pechu) உறுத்தி செய்துள்ளார்.
விடா முயற்ச்சி படத்திற்காக லைக்கா நிறுவனம்( Lyca Mobile) முதலில் 150 கோடியை சம்பளமாக பேசி இருந்தது. ஆனால் தனது மார்கெட் நடிகர் விஜய் அளவுக்கு இருக்க வேண்டும் என்று, தனிப்பட்ட முறையில் நடிகர் அஜித் அவர்கள் லைக்கா சுபாஷ்கரனிடம் கேட்டாராம். இதனால் 185 கோடியை சம்பளமாக கொடுக்க ஒப்புக் கொண்டார் சுபாஷ் கரன். இதனையே ஒரு பிடியாக வைத்து, தனது சம்பளம் 185 கோடி என்று அறிவித்தார் அஜித். ஆனால் அவரது பல படங்கள் அடுக்கடுக்காக , தேல்வியடைந்த நிலையில் அவர் நிலை தற்போது கவலைக்கிடமாக உள்ளது.
ஆங்கிலப் படங்கள் மீது கடும் மோகம் கொண்டுள்ள நடிகர் அஜித் அவர்கள், எந்த ஒரு இயக்குனர் தமது சொந்தக் கதையோடு வந்தாலும், உடனே ஒரு ஆங்கிலப் படத்தை காட்டி அது போல ஒரு கதையை ரெடி பண்ணுங்கள் என்று கூறுவது வழக்கம். இதுவே மகிழ் திருமேணிக்கும் நடந்தது. அதன் பின்னர் அய்சர் பைஜானில் நடந்த படப் பிடிப்பு, பின்னர் paramount pictures நிறுவனம் போட்ட வழக்கு, எல்லாமே ஊர் அறிந்த உண்மை.
பணம் கொட்டிக் கிடந்தவேளை, தேவையே இல்லாமல் அஜித்தின் சம்பளத்தை உயர்த்தி விட்டது லைக்கா நிறுவனம். ஆனால் இன்று லைக்கா நிறுவனம் 180 மில்லியன் பிரித்தானிய பவுண்டுகளை, அன் நாட்டில் உள்ள VAT வரி ஆணையத்திற்கு செலுத்தவில்லை. விஜய் மல்லையா போல லண்டனை விட்டு ஓடி , தற்போது டுபாயில் தஞ்சமடைந்துள்ளார்கள் லைக்கா நிறுவனத்தினர்.
லைக்கா நிறுவனத்திற்கே இந்த கதி... தற்போது அவர்கள் படத்தில் நடித்த அஜித்திற்கும் இதே கதி .. பணத்தில் மிகவும் கராராக இருக்கும் அஜித் குமார் அவர்கள், இனியாவது கதையை கேட்டு, தெரிவு செய்து நல்ல திரைப்படங்களில் நடிக்க வேண்டும். தற்போதைய நிலையில் நடிகர் விஜய் முதல் இடத்திலும், 10 இடத்தில் தல அஜித் குமாரும் இருப்பதாக கூறப்படுகிறது.
