நடிகை நயன் தாராவுக்கு, கணவர் விக்னேஷ் கொடுத்த றோல்ஸ் றோயிஸ்( rolls royce ) கார் பற்றி தான் மொத்த தமிழ் நாடே இன்று பேசிக்கொண்டு இருக்கிறது. Actor Vijay, நடிகர் கமல் மற்றும் சில நடிகர்களிடம் தான் தமிழ் நாட்டில் றோல்ஸ் றோயிஸ் கார் உள்ளது. ஆனால் இவர்களை எல்லாம் மிஞ்சும் அளவுக்கு, ஒரு மாடலை இறக்குமதிசெய்து விக்னேஷ் நயன் தாராவுக்கு பிறந்த நாள் பரிசாக கொடுத்துள்ளார்.
கடந்த 18ம் திகதி நயன் தாரா தனது, 41வயது பிறந்த தினத்தை கொண்டாடி இருந்தார். இதற்காக அவரது ஆசைக் கணவர் 15 கோடி மதிப்பிலான ஒரு றோல்ஸ் றோயிஸ் காரை பரிசாக கொடுத்துள்ளார், இது Rolls-Royce Spectre கார்.
மின்சாரத்தில் இயங்கும் இந்தக் கார், சுமார் 4 செக்கனில், 100 மைல் வேகம் என்று சீறிப் பாயக் கூடியது. வழமையான கார்களைப் போல 2 சக்கர சக்த்தி கிடையாது. 4 சக்கரங்களும் இயக்க வல்லது. மொத்தம் 8 கமராக்கள் உள்ளது. இதனால் முன்னால் செல்லும் கார்கள், பின்னால் வந்துகொண்டு இருக்கும் கார்களை எல்லாம் அது துல்லியமாக கணித்து, ஆபத்தில் இருந்து தப்ப உதவும். மேலும் 16 ஏர் பேக் உள்ளதால். உலகிலேயே மிகவும் பாதுகாப்பான கார்களில் இதுவும் ஒன்று.
ஆட்டோமெட்டிக் பார்கிங் வசதிகள் உள்ளது. அதனால் கார் தானாகவே பார்க் செய்து கொள்ளும். நீங்கள் சிரமப்பட தேவை இல்லை. இது Limited Edition கார் என்பதால் உலகிலேயே குறிப்பிட்ட சிலரிடம் தான் இந்த வகையான கார் உள்ளதாக கூறப்படுகிறது. தற்போது நயன் தாரா அவர்கள், நடிப்பதை விட பல , நிறுவனங்களில் பணத்தை போட்டு பங்கு தாரராக மாறி வருகிறார். இதனூடாக அவர் பெரும் பணத்தை சம்பாதித்து வருகிறார். மாதம் ஒன்றுக்கு அவரது வருமாணம் மட்டும் 6 கோடியை தாண்டும் என்று கூறப்படுகிறது.
அந்த வகையில் பார்க்கும் போது 15 கோடிக்கு கார் வாங்குவது என்பது பெரிய விடையமே அல்ல. இருந்தாலும் ரெம்பவுமே சர்பிரைசாக விக்னேஷ் இந்த காரை வாங்கி நயன் தாராவுக்கு பரிசாக கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

