Election Update
Tamil Nadu Election 2026: Live schedule - Click here
Click Here

Big boss 8: this week double elemanation இந்த வாரம் 2 பேர் காலியாகப் போகும் பிக் பாஸ் சீசன் 8 யார் யார்


விஜய் டிவியின் பிக்பாஸ் நிகழ்ச்சி இன்னும் சில தினங்களில் நிறைவடையவுள்ள நிலையில் நிகழ்ச்சி பரபரப்பான கட்டத்தில் அடுத்தடுத்த எபிசோட்களை கொடுத்து வருகிறது. இந்த நிகழ்ச்சியில் கடந்த சில வாரங்களாக டபுள் எவிக்ஷன் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த வாரம் வெளியேற்றப்பட்டுள்ள இரு போட்டியாளர்கள் யார் என்பது தெரியவந்துள்ளது. இந்த வாரம் போட்டியாளர் அருண் வெளியேற்றப்பட்டுள்ளதாக தெரிகிறது. அவருக்காக கடந்த சீசனின் போட்டியாளர் அர்ச்சனா தொடர்ந்து ஆதரவு தெரிவித்து வந்தார். கடந்த இரு தினங்களுக்கு முன்னதாகவும் அருணும் தானும் இருக்கும்படியான வீடியோவையும் வெளியிட்டு மறைமுகமாக அருணுக்கு ஆதரவாக செயல்பட்டார்.

பிக்பாஸ் 8 தமிழ் ஷோ: விஜய் டிவியின் பிக்பாஸ் 8 நிகழ்ச்சி கடந்த அக்டோபர் மாதம் 6ம் தேதி துவங்கப்பட்டது. கடந்த 7 சீசன்களில் நடிகர் கமல்ஹாசன் இந்த நிகழ்ச்சியின் ஹோஸ்ட்டாக செயல்பட்ட நிலையில், இந்த 8வது சீசனில் நடிகர் விஜய் சேதுபதி புதிய ஹோஸ்ட்டாக செயல்பட்டு வருகிறார். அவரது என்ட்ரி இந்த நிகழ்ச்சிக்கு புதிய அத்தியாயத்தை ஓபன் செய்திருந்தது. இருந்தபோதிலும் கடந்த சீசன்களில் கமல்ஹாசன் கலவையான விமர்சனங்களை பெற்றதை போலவே இவரும் பெற்றதை பார்க்க முடிந்தது. இந்நிலையில் பிக்பாஸ் 8 நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இன்னும் சில தினங்களில் இந்த நிகழ்ச்சி நிறைவடையவுள்ளது.

இந்த வாரமும் டபுள் எலிமினேஷன்: இந்த நிகழ்ச்சியில் கடந்த சில வாரங்களாக அடுத்தடுத்த டபுள் எலிமினேஷன் செய்யப்பட்டு வருகிறது. நிகழ்ச்சியின் வலுவான போட்டியாளர்களாக கருதப்பட்ட பலர் நிகழ்ச்சியில் இருந்து அடுத்தடுத்து வெளியேற்றப்பட்டதையும் பார்க்க முடிந்தது. இதனிடையே, இந்த நிகழ்ச்சியில் தோற்று வெளியேறிய போட்டியாளர்கள் மீண்டும் நிகழ்ச்சிக்குள் நுழையும் நிகழ்வு கடந்த சில தினங்களில் நடந்தது. இதில் முன்னாள் போட்டியாளர்கள் சிலர் சர்ச்சை கருத்துக்களை பேசியதை பார்க்க முடிந்தது. இதனிடையே கடந்த வாரங்களை போல இந்த வாரமும் டபுள் எவிக்ஷன் நடந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அருண் & தீபக் எலிமினேஷன்: இதில் முதலாவதாக போட்டியாளர் அருண் வெளியேறியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இவரும் பலமான போட்டியாளராகவே பார்க்கப்பட்டார். கடந்த சீசனில் டைட்டிலை வெற்றி கொண்ட அர்ச்சனாவின் காதலரான அருணை பார்ப்பதற்காக அவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு பிக்பாஸ் வீட்டிற்குள் வந்திருந்தார். மேலும் வெளியில் இருந்து அருணுக்கு ஆதரவான கருத்துக்களை அவர் பேசி வந்தார். கடந்த சில தினங்களுக்கு முன்பு, அருணும் தானும் நெருக்கமாக இருக்கும் வீடியோவையும் வெளியிட்டு அவரை பிரிந்திருப்பது மிகுந்த வேதனையை கொடுப்பதாகவும் கூறியிருந்தார்.

Share this news: Back to Home