Election Update
Tamil Nadu Election 2026: Live schedule - Click here
Click Here

அடேங்கப்பா அல்லு அர்ஜுன் இப்போதான் பெருமூச்சு விட்டார் பெண் இறந்த வழக்கில் அதிரடி தீர்ப்பு !

 


புஷ்பா 2 படம் பார்கச் சென்ற 35 வயதுப் பெண், கூட்ட நெரிசலில் சிக்கி இறந்து போன வழக்கில், அல்லு அர்ஜுனை ஹைதரா பாத் பொலிசார் கைதுசெய்து இருந்தார்கள். இதனை தொடர்ந்து நீதிமன்றில் வழக்கும் பதிவு செய்யப்பட்டு இருந்தது. அவருக்கு நீதிமன்றம் இடைக்கால ஜாமீன் வழங்கிய நிலையில் இன்று நீதிமன்றம் வழக்கமான ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது. இதனால் அல்லு அர்ஜுன் நிம்மதியடைந்துள்ளார்.

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் அல்லு அர்ஜுன். இவர் நடித்த புஷ்பா திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. தெலுங்கு மட்டுமின்றி தமிழ் உள்பட பல மொழிகளில் இந்த திரைப்படம் வெளியாகி ரசிகர்களின் மனதை கவர்ந்தது.இதையடுத்து நடிகர் அல்லு அர்ஜூன், நடிகை ராஷ்மிகா மந்தனா நடிப்பில் புஷ்பா 2 திரைப்படம் உருவானது. இந்த திரைப்படம் கடந்த மாதம் 5ம் தேதி திரையரங்கில் வெளியானது. இந்த திரைப்படம் ரூ.2 ஆயிரம் கோடி அளவுக்கு வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

திரைப்படம் வெளியாகும் முந்தைய நாள் அதாவது டிசம்பர் 4ம் தேதி அதாவது 'புஷ்பா 2' திரைப்படம் ஹைதராபாத்தில் உள்ள சந்தியா தியேட்டரில் சிறப்பு காட்சி திரையிடப்பட்டது. அதனை பார்க்க அல்லு அர்ஜுன் சென்றார். அப்போது அவரை பார்க்க ரசிகர்கள் போட்டிப்போட்டனர். இதனால் நெரிசல் ஏற்பட்டது. அதில் ரேவதி என்ற பெண் உயிரிழந்தார். இதன் காரணத்தால் பொலிசார் இவரைக் கைதுசெய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது. தற்போது இவருக்கு ஜாமீன் கிடைத்துள்ளது. 

Popular Telugu actor Allu Arjun was arrested by Hyderabad police on Friday in connection with a stampede-like incident that occurred on December 4 during the premiere of his latest film, "Pushpa-2: The Rule."

















Share this news: Back to Home