Election Update
Tamil Nadu Election 2026: Live schedule - Click here
Click Here

BIG BOSS நிகழ்ச்சி பற்றி அந்த மாதிரி ஒரு கேள்வியை கேட்ட சனம் ஷெட்டி சேதுபதி என்ன சொல்வார்


பிக் பாஸ் தமிழ் சீசன் 8 இறுதி கட்டத்தினை எட்டிவிட்டது. இந்த வாரம் கிட்டத்தட்ட முடிந்து விட்டதால், இந்த வாரம் யாரெல்லாம் எலிமினேட் செய்யப்படுவார்கள் என்ற கேள்வி ரசிகர்கள் மனதில் தீவிரமாக ஓடிக்கொண்டு உள்ளது. இதுமட்டும் இல்லாமல், 

இந்த வாரம் நடைபெற்று வரும், டிக்கெட் டூ ஃபினாலே டாஸ்க் மிகவும் சுவாரஸ்யமாகவும் பரபரப்பாகவும் நடைபெற்று வருகின்றது. இப்படியான நிலையில் நடிகையும் முன்னாள் பிக் பாஸ் போட்டியாளருமான சனம் ஷெட்டி தனது எக்ஸ் பக்கத்தில் எழுப்பியுள்ள கேள்வி பலரது கவனத்தினை ஈர்த்துள்ளது.

வழக்கமாக ஒரு சீசன் தொடங்கிவிட்டாலே, ஷனம் ஷெட்டி தொடர்ந்து அந்த சீசன் குறித்தும் போட்டியாளர்களின் ஆட்ட நேர்த்தி குறித்தும் தனது கருத்தினை தெரிவித்து வருவதை வாடிக்கையாகக் கொண்டுள்ளார். அந்த வகையில் இந்த சீசன் குறித்தும் போட்டியாளர்களின் ஆட்டம் குறித்தும் தனது சமூக வலைதளப் பக்கங்களில் கருத்து தெரிவித்து வருகின்றார். 

இதுமட்டும் இல்லாமல், தனது யூடியூப் சேனலில் வீடியோக்களையும் பதிவிட்டு வருகின்றார். போட்டி முடிய இன்னும் மூன்று வாரங்கள் மட்டுமே உள்ளது. வீட்டில் மொத்தம் 10 போட்டியாளர்கள் உள்ளனர். இதில், சௌந்தர்யா, முத்துக்குமரன், அருண், தீபக், மஞ்சரி, ஜாக்குலின், பவித்ரா ஜனனி, ரானவ், ரயான் மற்றும் விஷால் என 10 போட்டியாளர்கள் உள்ளனர். 

இதில் மஞ்சரி, ரானவ் மற்றும் ரயான் ஆகியோர் வைல்ட் கார்டில் உள்ளே வந்த போட்டியாளர்கள் ஆவர். இந்த வாரம் எலிமினேஷனுக்கு மொத்தம் 8 போட்டியாளர்கள் நாமினேட் செய்யப்பட்டுள்ளனர். இந்த வாரம் நாமினேட் செய்யப்படாத போட்டியாளர்கள் என்றால் அது, சௌந்தர்யா மற்றும் முத்துக்குமரன் மட்டும்தான். மற்ற போட்டியாளர்கள் நாமினேட் செய்யப்பட்டுள்ளனர். 

சனம் ஷெட்டி: இந்த வாரம் நடைபெறும் டிக்கெட் டூ ஃபினாலே டாஸ்க்கில் வெற்றி பெறும் போட்டியாளர் நிச்சயம் இறுதிவரை இருப்பார் என்பது விதி. எனவே, டிக்கெட் டூ ஃபினாலா டாஸ்கில் புள்ளிகளைப் பெற போட்டியாளர்கள் தீவிரமாக விளையாடிக்கொண்டு உள்ளனர். இப்படியான நிலையில் சனம் ஷெட்டி தனது எக்ஸ் பக்கத்தில் இந்த சீசனில் பி.ஆர் மூலம் வாக்குகளை வாங்கி வீட்டில் இருக்கும் போட்டியாளர்கள் யார் என்ற கேள்வியைக் கேட்டுள்ளார்.













Share this news: Back to Home